8 கோடியை வீண் செய்ததா மும்பை ; இந்த ஆண்டு இவர் விளையாடமாட்டார் என்று தெரிந்தும் மும்பை அணி கைப்பற்றியுள்ளது ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஐபிஎல் டி- 20 போட்டிகள் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 14 ஆண்டுகள் நடந்து முடிந்துள்ளது ஐபிஎல் டி-20 போட்டிகள்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் :

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ . அதனால் அணிகளை சீரமைக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த முறை மெகா ஏலம், அதுவும் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் : ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் படத்தை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் உள்ளதால் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்ட் போன்ற வீரர்களை தக்கவைத்தது மும்பை.

நேற்று மற்றும் இன்று நடந்து நடந்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இஷான் கிஷான், ப்ரேவிஸ், பசில் தம்பி, முருகன் அஸ்வின், ஜெயதேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், அர்ச்சர், டேனியல் சம்ஸ், மில்ஸ், டிம் டேவிட் போன்ற வீரர்களை கைப்பற்றியுள்ளது.

அதில் இஷான் கிஷான் தான் அதிகபட்ச விலையான 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி எதற்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா அர்ச்சரை 8 கோடி விலைக்கு வாங்கியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா அர்ச்சருக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் காயம் ஏற்பட்டது. அவரால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட முடியாது என்றும் தகவல் வெளியானது. அந்த காயம் இன்னும் சரியாக காரணத்தால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் விளையாட வாய்ப்பு இல்லை என்று முன்பே பல உண்மை செய்திகள் வெளியானது.

ஒருவேளை 2023 ஐபிஎல் போட்டியில் காயம் சரியாகி மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினால் அவரது விளையாட்டு எந்த அளவிற்கு இருக்கும் ?? சிறப்பாகவும் இருக்கலாம் அல்லது மிகவும் மோசமாகவும் இருக்கலாம். கிரிக்கெட் போட்டியில் எந்த ஒரு வீரராலும் ஒரே மாதிரியாக அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது.

இருப்பினும் அதிக விலைகொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது மும்பை ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோஃப்ரா அர்ச்சர் 2020ஆம் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 14 போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 20 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் தான் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துக்கொள்ளவில்லை . ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற முன்று வீரர்களை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here