ஐபிஎல் 2022 ஏலத்தில் சென்னை அணி கைப்பற்றிய வீரர்களின் முழு பட்டியல் இதோ ;

0

ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் ஒருவழியாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற அணிகளை அறிமுகம் செய்த காரணத்தால் தான் இந்த முறை மெகா ஏலம் இரு நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பலர் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமாக வீரர்களை ஏலத்தில் கைப்பற்றியுள்ளது. முன்பு சிஎஸ்கே அணி, மஹேந்திர சிங் தோனி, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற வீரர்களின் பட்டியல் இதோ ;

1. அம்பதி ராயுடு

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார். 2018ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை அணியில் விளையாடி வருகிறார். இருப்பினும் மீண்டும் ஏலத்தில் 6.75 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் மொத்தமாக 16 போட்டியில் விளையாடி 257 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 72 ரன்களை கைப்பற்றியுள்ளார்.

2. தீபக் சஹார்

இவரும் மீண்டும் சென்னை அணியால் கைப்பற்றப்பற்றுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தீபக் சஹார் மொத்தம் 15 போட்டியில் விளையாடி 14 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆனால் சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொள்ளவில்லை, இருப்பினும் மீண்டும் சென்னை அணியே கைப்பற்றியுள்ளது.

3. ராபின் உத்தப்ப ;

கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 2021 போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றுள்ளார். பின்னர் அருமையாக விளையாடிய ராபின் உத்தப்ப , இறுதி போட்டி வரை சிறப்பாக விளையாடி வந்துள்ளார். அதனால் மீண்டும் சென்னை அணியால் கைப்பற்றப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் 4 போட்டிகளில் 115 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிகபட்சமாக 63 ரன்களை கைப்பற்றியுள்ளார் உத்தப்பா…!!

4. மிச்சேல் சண்ட்னர்

மிச்சேல் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடப்பெற்று வருகிறார். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐபிஎல் 2022 ஏலத்தில் 1.9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது சிஎஸ்கே அணி.

5. டேவன் கான்வே

சவுத் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார் கான்வே. இந்த முறை புதிதாக ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்றார். அதனை சரியாக பயன்படுத்தி அடிப்படை விலையான 1 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

6. கிறிஸ் ஜோர்டன்

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல் ரவுண்டரான கிறிஸ் ஜோர்டன் கடந்த இரு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல போராட்டங்களுக்கு பிறகு 3.6 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது.

அதேபோல, ப்ராவோ, ஹரி நிஷாந்த், ஜெகதீசன், ஆசிப், மஹீஷ் தீக்சஹானா, ராஜவர்தான் ஹங்கர்கேகர், சிமர்ஜெட் சிங், ஆடம் மில், பகத் வர்மா போன்ற வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here