சென்னை அணியில் தீபக் சஹார் இருக்கிறாரா ?? இல்லையா ?? தகவலை வெளியிட்டது சிஎஸ்கே ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்…!

இந்த முறை 10 அணிகளை கொண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது. ஆமாம், சமீபத்தில் தான் ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் நடந்து முடிந்துள்ளது. அதில் எதிர்பார்த்த விஷயங்களும் எதிர்பார்க்காத விஷயங்களும் நடந்துள்ளது.

ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை அணியை பற்றி கேட்ட தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை தல மகேந்திர சிங் தோனி தான் வழிநடத்தி வருகிறார்.

இதுவரை மொத்தம் 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சென்னை அணி மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. இந்த முறை சென்னை அணியில் கடந்த ஆண்டு விளையாடிய சில வீரர்கள் அதேபோல இடம்பெற்றுள்ளனர்.

அதில் ப்ராவோ, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, தீபக் சஹார் போன்ற வீரர்கள் ஏலத்தில் சென்னை அணி கைப்பற்றியுள்ளது. இருப்பினும் சமீப காலமாக இந்திய அணியில் சிறப்பான ஆல் -ரவுண்டராக விளையாடி வருகிறார் தீபக் சஹார். ஆமாம் , கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அவரது விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது தான் உண்மை.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டு இருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் இடம்பெற்றார் தீபக் சஹார். ஆனால் அவருக்கு காயம் பெரிய அளவில் இருந்த காரணத்தால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் ஐபிஎல் 2022 போட்டிகளிலும் அவரால் சரியாக விளையாட முடியாது என்று சில தகவல் வெளியானது. இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினார்கள். ஏனென்றால் ஐபிஎல் 2022 ஏலத்தில் தீபக் சஹாரை 14 கோடி விலை கொடுத்து வாங்கியது சென்னை.

சமீபத்தில் வெளியான தகவலின் படி தீபக் சஹாரின் காயம் ஒன்றும் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தீபக் சஹார் சில வாரங்கள் நிச்சயமாக ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளார்.

ஆனால் நிச்சியமாக ஏப்ரல் மாதத்தில் தீபக் சஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார் என்று கூறியுள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹாரின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்று உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்..!