இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணியை வாஷ்-அவுட் செய்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றனர்.


அதில் சில நாட்களுக்கு முன்பு தான் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் ரன்களை அடித்து டார்கெட் செட் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 574 ரன்களை அடித்தனர்.
பின்னர் இந்திய அணி Declare செய்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது இலங்கை அணி பேட்டிங் செய்ய தொடங்கினார்கள். ஆனால் முதல் இன்னிங்ஸ்-ல் வெறும் 174 ரன்களை அடித்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். அதனால் இலங்கை அணியை முதலில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்தனர்.


அதிலும் இலங்கை அணி 178 ரன்களை அடித்த காரணத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று கேட்டால் அது ஜடேஜா தான்..!
ஆமாம் , ரவீந்திர ஜடேஜா 175 ரன்களை அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி வந்தார். பின்னர் இரு இன்னிங்ஸ்-ல் பவுலிங் செய்து 9 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஜடேஜா. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ;


இப்பொழுது தான் ஜடேஜா 100 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டை ஆகிய இரு விஷயங்களும் நடந்த முதல் போட்டி இதுதான். எனக்கு இது ஆச்சரியமாக தான் உள்ளது. ஏனென்றால், அவர் தனது தொழிலைப் பற்றி நடந்துகொண்ட விதம் மற்றும் அவர் சுமக்கும் பரம்பரை வகை.
இதில் இருந்து எனக்கு ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. இது ஒன்றும் முதலும் இல்லை, முடிவும் இல்லை. ரவீந்திர ஜடேஜா நிச்சியமாக இதனை தொடர்ந்து செய்ய போகிறார் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ஜடேஜா பல தடைகளை தாண்டி முன்னேறிக்கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை மற்றும் என்னுடைய வாழ்த்துக்கள் அவருக்கு இருக்கும் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.


இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 12ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி ட்ரா அல்லது வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா இல்லையா ??