தீபக் சஹார் , சென்னை அணியில் இணைய போகும் தேதி வெளியானது ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ;

சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி சென்னை அணி எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வீரர் தான் தீபக் சஹார். கடந்த ஆண்டு சென்னை அணியின் விளையாடிய சஹார் சிறப்பான பந்து வீச்சால் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 யில் அதிகபட்ச 14 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சென்னை அணி.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் தீபக் சாருக்கு பலமாக காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் விளையாட முடியாத நிலை உருவானது. இருப்பினும் முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சென்னை அணி உறுதி செய்தது.

தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது சென்னை, பின்பு இரு தினங்களுக்கு முன்பு லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியதில் சென்னை அணி மிகவும் மோசமான தோல்வியை கைப்பற்றியது. ஆமாம், 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தும் ஒரு பலனும் இல்லாமல் போனது.

அதற்கு முக்கியமான காரணமாக பவுலிங் தான் என்று அனைவரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை அணி ஷர்டுல் தாகூர், தீபக் சஹார் போன்ற முன்னணி பவுலர்கள் விளையாடி வந்த நிலையில் இந்த முறை யாரும் இல்லாதது மிகப்பெரிய சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இப்பொழுது சென்னை அணியில் முக்கேஷ், தேஷ்பாண்டே இருவரும் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகின்றனர். ஆனால் எப்பொழுது தான் தீபக் சஹார் சென்னை அணியில் இடம்பெற போகிறார் என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தீபக் சஹார் இப்பொழுது பெங்களூரில் உள்ள NCA வில் இருப்பதாகவும், எல்லாம் சரியாக நடந்தால் நிச்சியமாக இன்னும் இரு வாரங்களில் சென்னை அணியில் தீபக் சஹார் இடம்பெறுவார். அதுவும் மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளனர்.

அதில் தீபக் சஹார் இடம்பெற் அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தீபக் சஹார் அணியில் இடம்பெறுவதற்குள் சென்னை அணி ஐந்து போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்குள் சென்னை அணிக்கு சரியான பவுலர்கள் கிடைத்தால் அணிக்கு நல்லதாக இருக்கும்..!

சென்னை அணிக்கு தீபக் சஹார் மிகவும் முக்கியமான வீரரா ?? இல்லையா ?? தீபக் சஹார் இடம்பெற்றால் சென்னை அணிக்கு பவுலிங் பிரச்சனை தீர்ந்து விடுமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!