இவர் மட்டும் சரியாக விளையாடினால் , அடுத்த உலகக்கோப்பை போட்டியில் வெற்றி பெற முடியும் ; ரவி சாஸ்திரி உறுதி ;

0

இவர் மட்டும் இந்த ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் போதும் நிச்சியமாக அடுத்த உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றியாளராக இருப்பார்.

கடந்த ஆண்டு இறுதி நடந்த முடிந்த ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிகளில் விளையாடினார் ஹார்டிக் பாண்டிய. ஆனால் கடந்த 1 வருடத்திற்கு முன்பு ஹார்டிக் பாண்டியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருந்து ஹார்டிக் பாண்டியாவுக்கு சரியான பவுலிங் அமையவில்லை.

அப்படி இருந்தும் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய பெயர் இடம்பெற்றது பலருக்கு அதிசயமாக தான் இருந்தது. எதிர்பார்த்த படி ஹார்டிக் பாண்டிய சரியாக விளையாடவில்லை. அதனை அடுத்து இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய பங்கேற்கவில்லை.

இதனை பற்றி பேசிய ஹார்டிக் பாண்டிய, நான் பவுலிங் பயிற்சி செய்து வருகிறேன். அதனால் நான் சொல்லும்வரை என்னை இந்திய அணியில் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் ஹார்டிக். பின்னர் இப்பொழுது ஐபிஎல் 2022யில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டிய வழிநடத்தி வருகிறார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; “லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் ஆட்டம் எதிர்பாராத விதமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஹார்டிக் பாண்டியாவின் நம்பிக்கை மற்றும் பிட்னெஸ் மிகவும் ஆர்புதமாக உள்ளது.”

“எப்பொழுது அவரது மூளை போட்டியில் மட்டுமே தான் இருக்கும். அதுமட்டுமின்றி, கடந்த பல மாதங்கள் விளையாடாமல் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கு எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் சிறந்த விஷயம். அதுமட்டுமின்றி, லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஹார்டிக் பாண்டிய நான்கு ஓவர் பவுலிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.”

“அது எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம் தான். அவரை (ஹார்டிக் பாண்டிய) போல ஒரு போட்டியின் வெற்றியாளரை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. அவரது நோக்கம் மட்டும் சரியாக இருந்தால் நிச்சியமாக இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஹார்டிக் பாண்டிய மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பவுலிங் செய்ய தொடங்கிவிட்டார். அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் இவரது பெயர் நிச்சியமாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணிக்கு ஹார்டிக் பாண்டியாவின் பவுலிங் மிகவும் முக்கியமான விஷயமா ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here