இவர் மட்டும் பிசிசிஐ உறுப்பினராக இடம்பெற்றால் இந்திய அணிக்கு இந்த முறை உலகக்கோப்பை உறுதி ; டேனிஷ் கனேரியா ஓபன் டாக் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் குழப்பங்கள் :

சமீபத்தில் தான் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருந்த சேத்தன் சர்மா வெளியேறியதில் இருந்து பல குழப்பங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் எழுந்து வருகின்றனர்.

அதிலும் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சேத்தன் சர்மா தேர்வாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அடுத்த தலைமை தேர்வாளராக யார் இடம்பெற போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

புதிய தேர்வாளராக தோனிய?

2004ஆம் இந்திய அணியில் அறிமுகம் ஆன மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இதுவரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே அனைத்து விதமான ஐசிசி-கோப்பைகளையும் வென்றுள்ளனர்.

அப்படி இருக்கும்பட்சத்தில் தோனியின் அனுபவம் நிச்சியமாக இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.

அதில் “எனக்கு தெரிந்து இப்பொழுது இருக்கும் பிசிசிஐ-ல் ஒரு புதிய தேர்வாளர் குழு உருவாக வேண்டும். அதிலும் குறிப்பாக தோனியின் நோக்கம் மிகவும் அருமையான ஒன்று. தோனி போன்ற ஒரு வீரரை தேர்வாளர் குழுவில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.” டேனிஷ் கனேரியா.

ஐசிசி – டி-20 உலகக்கோப்பை 2021ல் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் வீரரான டேனிஷ் சொல்வது போல மகேந்திர சிங் தோனி தலைமை தேர்வாளராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும ?

கிரிக்கெட் ரசிகர்கள் உங்களுக்கான கேள்வி ?

அனைத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரராக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி. தோனி மீண்டும் இந்திய அணியில் ஏதாவது உறுப்பினராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ?