இதை மட்டும் செய்தால் நிச்சியமாக இந்திய வீரர்களை கையில் பிடிக்கவே முடியாது ; ஆனால் அது BCCI கையில் தான் உள்ளது ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

0

ஆஸ்திரேலியா : ஒருவழியாக லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை மதியம் 1:30 மணியளவில் மெல்போர்ன் மைதானத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதில் யாய் வென்று கோப்பையை வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் :

இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தான் வெல்லும் என்று ரசிகர்கள் பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக தான் நடைபெற்று லீக் போட்டிகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாபே, நெதர்லாந்து போன்ற அணிகளை வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்தது இந்திய. அதனால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன ?

இந்திய அணியின் பேட்டிங் பற்றி தவறு சொல்லவே முடியாது. ஏனென்றால், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களின் பங்களிப்பு இந்த உலகக்கோப்பை போட்டியில் பெரிதாக அமைந்தது. ஆனால் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் எந்த விதமான போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. நிச்சியமாக தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையாதது தான் முக்கியமான காரணம் என்று சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதே சமையத்தில், இந்திய அணியின் பவுலிங் வலுவாக இருக்கிறதா இல்லையா ? என்று கேட்டால் அது சந்தேகம் தான். அனுபவம் மற்றும் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அர்ஷதீப் சிங், ஷமி, புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களை நம்பித்தான் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடியது இந்திய. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.

ரசிகர்கள் ஆவேசம் :

எப்பொழுது இது போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறினால், உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும், பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என்று அனைவரும் அவரவர் கருத்துக்களை பகிர்வது வழக்கம் தான். ஆனால் இந்த முறை ரசிகர்களின் கோபம் சரியான ஒன்று தான். கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிகவும் குறைவாக மாறிவிட்டது. அதனால் கேப்டன் பதவியில் இருந்து விலகி தொடக்க வீரராக மட்டும் விளையாடினால் நிச்சியமாக சிறப்பாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, மற்ற வீரர்கள் பலர் பிக் பாஸ் லீக் , பாகிஸ்தான் லீக் போன்ற போட்டிகளில் விளையாடி வருவதால் மற்ற அணிகள் எப்படி விளையாடும், மற்ற வீரர்களை விக்கெட் செய்ய என்ன செய்யவேண்டுமென்று நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி எப்படி ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

ராகுல் டிராவிட் ஓபன் டாக் :

“இங்கிலாந்து வீரர்கள் பலர் இங்கு (ஆஸ்திரேலியா) பல விதமான போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். அதனால் போட்டி எப்படி மாறும், எப்படி விளையாடினால் சரியாக இருக்கும் என்று நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஆனால் நாம் அப்படி மற்ற நாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளுக்கு இந்திய வீரர்களை அனுப்பினால் நிச்சியமாக உள்ளூர் போட்டிகள் (ரஞ்சி கோப்பை) அழிந்துவிடும். ஆனால் நம்ம வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாட அனுப்பினால் நிச்சியமாக பல விஷயங்களில் முன்னேற்றத்தை பார்க்கலாம். ஆனால் என் கையில் இல்லை பிசிசிஐ கையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here