நிச்சியமாக உலகக்கோப்பை போட்டியில் இவர் இந்திய அணியில் விளையாடுவார் ; அதுவும் பினிஷராக ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய மற்றும் தென்னப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்பொழுது தான் முடிந்துள்ளது. அதில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வென்ற நிலையில் சீரியஸ் ட்ரா ஆனது. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரு டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இது போன்ற சீரியஸ் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது உறுதி தான். அதிலும் ஐபிஎல் 2022 போட்டிகளில் பட்டைய கிளப்பினார் 37 வயதான தினேஷ் கார்த்திக்.

அதனால் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மொத்தம் 4 போட்டிகளில் விளையாடி 91 ரன்களை அடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக நான்காவது போட்டியில் அதிரடியாக விளையாடி 55 ரன்களை அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து அவருக்கு (தினேஷ்) நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.”

“அதிலும் குறிப்பாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதில் அவர் தான் பிளேயர் ஆஃப் தி மேட்ச், நான்காவது போட்டியில் 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அதில் இருந்தே தெரிகிறது தினேஷ் கார்த்திக் -க்கு என்ன திறமை உள்ளது என்று.”

“இறுதி நேரத்தில் எந்த விதமான சூழ்நிலையிலும் விளையாடுவார் தினேஷ் கார்த்திக். அதனால் உலகக்கோப்பை போட்டிக்கு எதிரான போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு தேர்வாளர்கள் நிச்சயமாக இவரை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் இப்பொழுது இவரது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.”

“மூன்றாவது அல்லது நான்காவதாக பேட்டிங் செய்ய போவதில்லை. இவர் எப்பொழுதும் 5,6,7 வதாக பேட்டிங் செய்வது தான் வழக்கம். எப்பொழுது இறுதியாக ஐந்து (15 – 20ஓவர்). இவரது விளையாட்டு நிச்சியமாக போட்டியில் பல மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, தினேஷ் கார்த்திக் விளையாடிய தொடங்கினால் நிச்சியமாக அதிக பந்துகளை எதிர்கொண்ட பின் ரன்களை அடிக்கமாட்டார், எப்பொழுதும் விரைவாக ரன்களை அடிக்க தொடங்குவார் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!