உலகக்கோப்பை போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இவர் தான் அணியில் இடம்பெறுவார் ; முன்னாள் வீரர் உறுதி ;

2

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளை பற்றி பேச்சு இப்பொழுது இருந்தே தொடங்கியுள்ளது தான் உண்மை. ஆமாம், இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் தான் உலகக்கோப்பை டி-20 2022 நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இப்பொழுது அயர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

இதனை தொடர்ந்து ஜூலை 1 முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நிச்சியமாக இந்த போட்டிகளின் அடிப்படையாக வைத்துதான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இருக்க வேண்டும் என்பதை பிசிசிஐ முடிவு செய்யும்.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியில் இப்பொழுது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதனால் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று ஆர்வம் எழுந்துள்ளது தான் உண்மை…!

டி-20 உலகக்கோப்பை 2022 போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ; “இதற்கு மேல் இந்திய கிரிக்கெட் ரவீந்திர ஜடேஜாவை நம்பி விளையாடுவது சந்தேகம் தான். ஆமாம், ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”

ஐபிஎல் 2022யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடந்த சம்பவத்தை நினைத்து கொண்டு சஞ்சய் பேசியுள்ளாரா ? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர். ஆனால் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பு அவரது திறமையை வெளிப்படுத்தியே ஆகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் பட்டேல் சரியான ஒரு மாற்றமாக இருக்குமா ?? இல்லையா ? உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..!

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here