இவர் சிஎஸ்கே அணிக்கு உறுதி ; முதலில் இவரை தான் கைப்பற்ற போகிறார்கள் ; முன்னாள் இந்திய வீரர் உறுதி ; அப்போ சிஎஸ்கே அணி மாஸ் ஆ?

ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த ஆண்டு ஏலம் மெகா அளவில் நடக்கப்போவதாகவும் அதுவும் பிப்ரவரி 13, 14ஆம் தேதி ஆண்டு நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் பழைய 8 அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தான் தக்கவைத்து கொள்ள முடியும் என்றும், மீதமுள்ள வீரர்களை அனைவரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள் என்றும் பிசிசிஐ கூறியது. அதேபோல, புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்களை கைப்பற்ற முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதன்படி இப்பொழுது அனைத்தும் முடிந்த நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதனால் சிஎஸ்கே அணியில் யார் யார் ஏலத்தில் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளன. அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது சாமுவலைத்தளங்களில் சென்னை சூப்பர் கின்ஸ்க் அணியில் இவர் நிச்சியமாக இடம்பெறுவார் என்று கூறியுள்ளார்.

வீர்ரகளை பற்றிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; நிச்சயமாக இந்த ஏலத்தில் டூப்ளஸிஸ் மீண்டும் சிஎஸ்கே அணியால் கைப்பற்றப்படுவார். சிஎஸ்கே அணிக்கு வயது ஒன்றும் பிரச்சனையாக இருக்காது. ஐபிஎல் 2021 யில் டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் சிறப்பான முறையில் சிஎஸ்கே அணியை வழிநடத்தியுள்ளனர்.

ஆனால் அவர் சர்வதேச போட்டிகளில் இப்பொழுது விளையாடுவது இல்லை. அதனால் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்பதை பார்த்து தான் ஆணியில் கைப்பற்ற வேண்டும். ஏனென்றால் அவர் ஒன்றும் இளம் வீரர் இல்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார் டூப்ளஸிஸ். இவர் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்களை அடித்துள்ளார் டூப்ளஸிஸ். இவருடன் பார்ட்னெர்ஷிப் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 16 போட்டிகளில் 635 ரன்களை அடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் அடித்த ரன்களால் தான் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தக்கவைக்கப்பட்ட நிலையில் டூப்ளஸிஸ் -ஐ கைப்பற்றுமா ? சென்னை அணி ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.