ஐபிஎல் 2022 ;
ஐபிஎல் 2022போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக எந்த பிரச்சனையும் இல்லாமல் 48 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றனர்.
சென்னை அணியின் நிலைமை :
இந்த ஆண்டு மோசமான ஆண்டாக தான் சென்னை அணிக்கு உள்ளது. ஏனென்றால் இதுவரை விளையாடிய 9 ஓடிகைள் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி. இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சென்னை அணிக்கு சவாலாக தான் இருக்கும்.
சென்னை அணியின் கேப்டன் பதவி :
கடந்த 208ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. ஆனால் இந்த முறை ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கும் முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. பின்பு ஜடேஜா தான் கேப்டன் என்று அறிவித்தது சென்னை அணி.
ஆனால் சென்னை அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினாலும், ஜடேஜாவுக்கு மன அழுத்தம் மோசமான காரணத்தால் அவரால் சரியாக பவுலிங் மற்றும் பீல்டிங் செய்ய முடியாமல் போனது. அதனால் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார் தோனி.
இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய வீரர் :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி. சிங் கூறுகையில் ; தோனி அணியில் இருக்கும் போது ஒரு கேப்டனாக பல விஷயங்களை கற்று கொண்டு வந்தார். அதேநேரத்தில், தோனி அணியில் இருக்கும்போது மற்ற வீரரை கேப்டனாக அறிவித்தால் நிச்சயமாக அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
ஏனென்றால் அணியில் தோனி உள்ளார். எந்த விதமான அழுத்தமும் கேப்டன்னுக்கு இருக்காது. ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தது சரி தான். அதேபோல கேப்டனாக அறிவித்த பின்பு முழு சீசனில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும். இப்படி பாதியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அது சரியான ஒன்றாக எனக்கு தெரியவில்லை.
கிரிக்கெட் போட்டிகளில் வழக்கமாக ஒன்று நடைபெறும். அது யார் அணியில் அனுபவம் மற்றும் சீனியர் ப்ளேயர் என்பதை பார்த்து தான் கேப்டன் பதவியை வழங்கி வருகின்றனர். அப்படி பார்த்தால் சென்னை அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி.
அதனால் விரைவாக தோனிக்கு பிறகு ஒருசீனியர் அல்லது ஜூனியர் வீரரை கேப்டனாக பொறுப்பேற்ற போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். அதனால் சென்னை மற்றும் தோனி சில முக்கியமான முடிவுகளை கையில் எடுக்க வேண்டும். ருதுராஜ் அல்லது மற்ற வீரர்களை கேப்டனாக அறிவிப்பதை பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆர்.பி.சிங்.
கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க..! சென்னை அணிக்கு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருந்தால் சரியாக இருக்குமா ?? அல்லது வேறு யார் கேப்டனாக இருந்தால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!