சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தான் எங்க அணியின் முக்கியமான பலம் தெரிந்தது ; டூப்ளஸிஸ் பேட்டி ;

0

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. பின்னர் போக போக பார்ட்னெர்ஷிப் அமையாமல் இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்தது பெங்களூர் அணி.

அதில் விராட்கோலி 30, டூப்ளஸிஸ் 387, மஹிபால் 42, தினேஷ் கார்த்திக் 26 ரன்களை அடித்தனர். பின்பு 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால், இறுதிவரை கடினமாக விளையாடிய சென்னை அணியால் 160 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது பெங்களூர் அணி. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 56, ருதுராஜ் கெய்க்வாட் 28, அம்பதி ராயுடு 10, மொயின் அலி 34 ரன்களை அடித்துள்ளனர். போட்டி முடிந்த பிறகு பேசிய டூப்ளஸிஸ் ; “இது எங்கள் அணிக்கு தேவையான வெற்றி தான்”.

“இப்பொழுது தான் நாங்கள் சரியான பாதையில் பயணம் செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் இருக்கும் பவுலர்கள் மிகவும் திறமையான வீரர் தான். முதலில் பேட்டிங் செய்யும்போது 165 ரன்கள் அடித்தால் போதும், அதற்கு மேல் ரன்கள் வந்தால் போனஸ் என்று தான் நான் நினைத்தேன்.”

“அதனால் தான் நாங்கள் முடிந்த வரை பவர் ப்ளே -வில் ரன்களை அடிக்கா முயற்சி செய்தோம்.அதனை சரியாக பயன்படுத்தி ரன்களையும் அடித்தோம். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது மிகவும் உதவியாக தான் உள்ளது.”

“பவுலிங் விட இப்பொழுது பேட்டிங்கை சரியாக செய்ய வேண்டும் என்பது தான் எங்களது எண்ணம். அதனை வலுவாக வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்யும் முதல் நான்கு வீரர்களில் ஒருவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ். “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here