IPL 2023 போட்டியில் சென்னை அணியின் கேப்டன் இவர் தான் ; அப்போ நிச்சியமாக சாம்பியன் படத்தை வெல்வது உறுதி ;

ஐபிஎல் 2022:

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. நேற்றுடன் ஐபிஎல் டி-20 2022 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. நாளை முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளனர். மொத்தம் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுகள் தகுதி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 2022:

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்றுள்ளது சென்னை. ஆனால் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் உண்மை. ஏனென்றால் சென்னை அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதனால் புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதுமட்டுமின்றி, இதுவரை 15 சீசன்களில் வெறும் இரு முறை மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது சென்னை அணி.

சென்னை அணியின் கேப்டன் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது தான் உண்மை. அதிலும் குறிப்பாக கேப்டன் பதவியில். ஏனென்றால் இதுவரை அபியேல் தொடங்கிய நாள் முதல் இந்த ஆண்டு தொடக்கத்திற்கு முன்பு வரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தியது மகேந்திர சிங் தோனி தான்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. இருப்பினும் தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக அதிக வாய்ப்புகள் உள்ளன.

அதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா வழிநடத்த தொடங்கினார். இருப்பினும் தொடக்கத்தில் சற்று தோல்வியை மட்டுமே சந்தித்தது சென்னை. அதுமட்டுமின்றி அழுத்தம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவால் கூட சரியாக விளையாட முடியாமல் போனது.

அதனால் மீண்டும் தோனியை கேப்டனாக அறிவித்தது சென்னை அணி. இருப்பினும் இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அடுத்த ஆண்டு தோனி இருப்பாரா ? இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னையில் தான் நான் இறுதியாக விளையாட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதனால் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார் தோனி. அதனால் நிச்சியமாக தோனி தான் கேப்டனாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யார் வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!