ஐபிஎல் போட்டியில் அசத்திய மூன்று வீரர்கள் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் உள்ளனர் ; அப்போ வெற்றி தான் ;

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 65 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே உள்ளது ஐபிஎல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு. ஐபிஎல் போட்டிகளில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ..! அவர்களுக்கு நிச்சியமாக இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டாகும். ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்த சில நாட்கள் கழித்து இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகள் நடைபெற உள்ளது.

அதில் விராட்கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா புஜாரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது பிசிசிஐ. இதற்கிடையில் மூன்று ஐபிஎல் நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் வலுவாக காணப்படுகிறது.

அதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரன் மலிக் இடம்பெற்றுள்ளார். இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக பவுலிங் செய்ய கூடிய வீரராக திகழ்கிறார் உம்ரன் மலிக். இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் உம்ரன் மலிக் 13 போட்டிகளில் 21 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியை சேர்ந்த அர்ஷிதீப் சிங் இந்திய அணியில் விளையாட உள்ளனர். அதில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடிய அர்ஷதீப் 10 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். ஆனால், இறுதி நேரத்தில் பவுலிங் செய்தால் அதில் அவரால் முடிந்த வரை ரன்களை கட்டுப்படுத்தி வருகிறார்.

அதுவும் டெத் ஓவரில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். மூன்றாவதாக மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த திலக் வர்மா பேட்ஸ்மேன் தான். இதுவரை 13 போட்டிகளில் 376 ரன்களை அடித்துள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிக ரன்களை அடித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களே..! தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வேறு எந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று நீங்க நினைக்குறீர்கள் ? என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here