நீங்க வேணாலும் பாருங்க, ஐபிஎல் 2023 ஏலத்தில் இவரை அதிக கோடி கொடுத்து கைப்பற்றுவார்கள் ; சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் டி-20 லீக் போட்டியாக அறிமுகம் ஆனது ஐபிஎல். பின்பு 20 ஓவர் போட்டி என்ற காரணத்தால் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றனர். அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள்.

மொத்தம் 15 சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான பேச்சு இப்பொழுதே தொடங்கிவிட்டது. ஆமாம், அடுத்த மாதத்தில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியை மனதில் வைத்துக்கொண்டு தான் ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை கைப்பற்றும் முயற்சியில் அனைத்து அணிகளும் ஈடுபடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுவும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு வந்த நிலையில் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகின்றன.

ஆனால், சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 52* ரன்களை அடித்துள்ளார். அதனால் தான் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, இந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்-ன் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக தான் இருந்துள்ளது.

அதனால் இந்த ஏலத்தில் இடம்பெற உள்ள பென் ஸ்டோக்ஸ்-கு அதிக விலை கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர். மேலும் அதனை பற்றி கூறுகையில் ; “போட்டியின் வெற்றியாளராக திகழும் பென் ஸ்டோக்ஸ் நிச்சியமாக இந்த ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு விற்கப்படுவார். ப்ளே – ஆஃப் போன்ற போட்டிகளில் இடம்பெற்றால் இவர்களை (பென் ஸ்டோக்ஸ்) போன்ற வீரர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.”

“அதேபோல தான் , இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கரன், அதுவும் அவருடைய பவுலிங் ஆசியாவில் சரியாக பயன்பட்டது. எந்த அணி அதிகமாக ஹோம் மைதானத்தில் குறைவான பவுன்ஸ் மற்றும் பிட்ச் குறைவாக இருக்கும் இடத்தில் சாம் கரன் பங்களிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதனால் தான் சிஎஸ்கே அணி அவரை (சாம் கரன்) சரியாக பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”