மூத்த வீரர்களுக்கு இடமில்லை ; நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் 11 பேர் இவர்கள் தான் ;

0

உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இப்பொழுது ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் விளையாட உள்ளனர்.

அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்தது. அதில் ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), ரிஷாப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான், தீபக் சஹார், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ்,அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரன் மாலிக்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, புவனேஸ்வர், ஷமி போன்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதுமட்டுமின்றி, மோசமான நிலையில் அரையிறுதி சுற்றில் தோல்வி பெற்று வெளியேறியது இந்திய. அதனால் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றும், இளம் வீரர்களுக்கு இனிவரும் போட்டிகளில் அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா, ஷமி போன்ற வீரர்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ஒரு சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ப்ளேயிங் 11 வீரர்களின் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டாப் ஆர்டர் : சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களான களமிறங்கிய அதிக வாய்ப்பு உள்ளது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் : சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆல் – ரவுண்டர் : ஹர்டிக் பாண்டிய, வாஷிங்டன் சுந்தர்.

பவுலர்கள் : புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், முகமத் சிராஜ், உம்ரன் மாலிக்.

இதில் சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், முகமத் சிராஜ் மற்றும் உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து வீரர்களை மாற்றினால் போட்டிகள் அனைத்தும் இந்தியா அணிக்கு சவாலாக மாறிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here