ரோஹித் இல்லை ; இந்த பையன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினால் அதிரடி தான் ; வாசிம் ஜாபர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எதிர்பார்த்து கொண்டு இருந்த நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

இதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை. அதனால் இந்த முறை அனைவரும் எதிர்பார்த்த படி ஹர்டிக் பாண்டிய தான் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்த போகிறார். அதற்கான அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டது.

அதில் ஹர்டிக் பாண்டிய, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், உம்ரன் மாலிக் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி மோசமான நிலையில் அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மோசமாக இருந்தது தான் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தேர்வு வந்தனர். ஆமாம், ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு முன்பே இந்த பிரச்சனை இந்திய அணியில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி உள்ளனர். இந்திய அணியின் நம்பிக்கையான தொடக்க வீரரான ரோஹித் சர்மா சமீப காலமாகவே அவரது பேட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் மிக மிக குறைவான ரன்களை மட்டுமே அடித்துள்ளார் ரோஹித். அதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெற உள்ள முதல் டி-20 போட்டியில் இவர் தொடக்க வீரராக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் அவரது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இதனை பற்றி பேசிய அவர் ” ரிஷாப் பண்ட் பினிஷராக பேட்டிங் செய்வதில் பயனில்லை என்று எனக்கு தெரிகிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் 4 மற்றும் 5வது இடத்தில் விளையாடி வரும் ரிஷாப் பண்ட் இடம், இப்பொழுது இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் கைப்பற்றியுள்ளனர். அவர் (ரிஷாப் பண்ட்) மட்டும் இன்று விளையாட தொடங்கி ரன்களை அடிக்க ஆரம்பித்தால் நிச்சியமாக எதிர் அணிக்கு ஆபத்தான வீரராக மாறிவிடுவார். அதனால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும்.”

“தொடக்க வீரரான ரிஷாப் பண்ட் களமிறங்கி பவர் ப்ளேவில் விக்கெட்டை இழக்காமல் 20 அல்லது 30 ரன்களை அடித்தால், நிச்சியமாக இந்திய அணிக்கு சிறந்த தொடக்க ஆட்டமாக அமையும். இதே அவர் (ரிஷாப்) 5வதாக பேட்டிங் செய்தால் அவர் மேல் நிச்சியமாக போட்டியின் அழுத்தம் ஏற்படும், அந்த நேரத்தில் சிக்ஸர் அடிப்பது சிரமமாக மாறிவிடும். ரிஷாப் பண்ட் -யிடம் நிச்சியமாக சிறந்த தொடக்க ஆட்டத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.”

வாசிம் ஜாபர் சொல்வது போல் இந்திய அணியின் தொடக்க வீரராக ரிஷாப் பண்ட் களமிறங்கி விளையாடினால் அதிரடியான தொடக்க ஆட்டம் இந்தியா அணிக்கு கிடைக்குமா ? இல்லையா ?