ராகுல் டிராவிட்-க்கு பதிலாக இவரை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யுங்கள் ; இந்திய அணி சிறப்பாக இருக்கும் ;

0

இந்திய கிரிக்கெட் அணி :

மற்ற அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வரும் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த முடிந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12ல் இடம்பெற இந்தியா கிரிக்கெட் அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆனால் அரையிறுதி சுற்றில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இங்கிலாந்து.

ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்த இந்திய அணிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, இறுதியாக தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டும் தான் ஐசிசி கோப்பையை வென்றுள்ளனர். அதனை அடுத்து விராட்கோலி, இப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகின்றனர்.

தோனியை மீண்டும் இந்திய அணியில் அழைத்து முக்கியமான பொறுப்பை கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி ஐபிஎல் 2023பிறகு ஓய்வு பெற்ற நிலையில் இந்த முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தோனியின் ஆலோசனை நிச்சியமாக உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் வெல்ல ஆதரவாக இருக்கும்.

இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறுகையில் : “இந்திய அணியில் வி.வி.எஸ்.லட்சுமண் மற்றும் சேவாக் போன்ற இருவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் லீடர்ஷிப் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடம். ஏனென்றால் வீரர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும். அதில் தோனி சரியான நபராக இருப்பார். என்னுடைய முதல் சாய்ஸ் தோனி தான் என்று கூறியுள்ளார் சல்மான் பட்.”

மேலும் இந்திய அணியின் இளம் வீரர்களை பற்றி பேசிய சல்மான் பட் பேசியதில் :” பெரிய நிகழ்வுகள் நடக்க வேண்டுமென்றால் ரிஸ்க் எடுக்க வேண்டியது அவசியம். இது ரிஸ்க் என்று சொல்ல முடியாது, சரியான வீரர்களை டெஸ்டிங் செய்ய வேண்டும். இதில் அனைவரும் வெற்றியாளராக இருக்க முடியாது. அதனால் போதுமான அளவிற்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் ஒரு சில முக்கியமான இடத்தில் விளையாட கூடிய சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார் சல்மான் பட்.”

ராகுல் டிராவிட்-க்கு பதிலாக மகேந்திர சிங் தோனி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இடம்பெற்றால் சிறப்பாக இருக்குமா ? தோனியின் வழிகாட்டுதல் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்குமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here