விராட்கோலியும், ரோஹித் சர்மாவும் ஒன்று தான் ; ஆனால் கோலிக்கு மட்டும் எழுந்து வரும் விமர்சனம் ; சோகத்தில் ரசிகர்கள் ;

0

இந்திய கிரிக்கெட் அணி : உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெற்ற தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஜிம்பாபே, இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரையும் வென்றிருள்ளனர். ஆனால்…!

தொடர்ந்து சொதப்பும் இந்திய கிரிக்கெட் அணி:

உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணியின் விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதேபோல தான் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிலும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணியால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியவில்லை.

அதுவும் இங்கிலாந்து அணியிடம் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற நிலையில் இந்திய அணி வெளியேறியது ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் தான் காரணம ?

விராட்கோலி கேப்டனாக இருந்த நேரத்தில் ஐபிஎல் போட்டியிலும் சரி, இந்திய அணிக்காக விளையாடிய உலகக்கோப்பை போட்டியிலும் சரி இந்திய கிரிக்கெட் அணி எந்த விதமான கோப்பையையும் வென்றது இல்லை.

அது ஏன் ..! கடந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின. அதில் நியூஸிலாந்து அணி வென்று கோப்பையை வென்றனர். அதனால் விராட்கோலிக்கும் எந்த விதமான கோப்பையை வெல்லும் ராசி அவருக்கு இல்லை என்று பலர் அவரவர் கருத்துக்களை பதிவு செய்தனர்.

அதனால் ஐபிஎல் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சியமாக டி-20 உலககோப்பையை இந்திய அணி வென்றுவிடும் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இப்பொழுது என்ன நடந்தது ?

ஐபிஎல் டி-20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இதுவரை சிறப்பாக அணியை வழிநடத்தி 5 முறை கோப்பையை வெல்ல காரணமாக இருந்துள்ளார். ஆனால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஆசிய கோப்பையும், உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இரு முக்கியமான தொடரில் ரோஹித் சர்மாவின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. விராட்கோலி மீண்டும் போர்மிற்கு திரும்பி நிலையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் உண்மை.

இந்திய அணிக்கு சிறந்த கேப்டன் யார் ? இனிவரும் போட்டிகளில் யார் கேப்டனாக இருந்தால் சிறப்பாக இருக்கும் ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here