இறுதி டெஸ்ட் போட்டியில் சீனியர் வீரரை களமிறக்கிய இந்திய அணி ; ப்ளேயிங் 11 இதுதான் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

இதற்கு முன்பு நடைபெற்று மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும்.

அப்படி இல்லையென்றால் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி பெற வேண்டும். அதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படியாவது வெல்ல வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளை எடுத்து விளையாடி வருகின்றனர்.

மூன்றாவது போட்டியில் விளையாடிய அதே ஆஸ்திரேலியா அணி தான் இன்றைய போட்டியிலும் விளையாட உள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி மட்டும் முக்கியமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

டாஸ்-க்கு பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : “நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் நினைத்தோம். இருந்தாலும் எங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று நன்கு தெரியும். பிட்ச்- ஐ பார்ப்பதை விட நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டியை நன்கு கவனித்து கொள்ள வேண்டியது அவசியம்.”

“அதுமட்டுமின்றி, சிராஜ்-க்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக ஷமி இடம்பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் ரோஹித்.”

அனுபவம் வாய்ந்த வீரரான ஷமி அணியில் இடம்பெற்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் ப்ளேயிங் 11 :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமத் ஷமி, உமேஷ் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here