தோனி நிச்சியமாக இதனை செய்ய போகிறார் ; அதில் மாற்றமே இல்லை ; ஏனென்றால் ? சேவாக் பேட்டி ;

0

ஐபிஎல் 2022 :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இன்றைய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

சிஎஸ்கே அணியின் நிலவரம் :

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சென்னை அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். அதனால் இனிவரும் போட்டிகள் நிச்சியமாக சென்னை அணிக்கு சவாலாக தான் இருக்க போகிறது.

சென்னை அணியின் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு :

இதுவரை அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே. அப்படி இருக்கும் நிலையில் சென்னை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் விளையாடி வருவது தான் உண்மை. ஏனென்றால், 3 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 9வதுஇடத்தில் உள்ளது சென்னை.

கடந்த ஆண்டு போல 8 அணியாக இருந்திருந்தால் 14 புள்ளிகள் எடுத்தால் ப்ளே -ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால் இந்த முறை புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாடி வருகின்றனர்.

அதனால் இந்த முறை ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகள் தேவைப்படுகின்றனர். அதனால் சென்னை அணி இன்னும் 5 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகள் கிடைக்கும், இல்லையென்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அமையாது.

சேவாக் கூறுகையில் ;

சென்னை அணியை இந்த ஆண்டு அத்தொடக்கத்தில் இருந்து 8 போட்டிகள் ரவீந்திர ஜடேஜா தான் வழிநடத்தி வந்தார். ஏனென்றால் தோனி , நான் கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்தார். ஆனால் இப்பொழுது மீண்டும் தோனி சென்னை அணியின் கேப்டனாக வந்ததது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பற்றி பேசிய சேவாக் ; “நான் இந்திய அணியை வழிநடத்திய தோனியை நன்கு கவனித்துள்ளேன். அதில் பல ஐசிசி கோப்பைகளுக்கான போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணி ஒருகட்டத்தில் தோல்வியை மட்டுமே பெற்று கொண்டு வரும். “

“அதனை நிலையில் சரியாக யோசனை செய்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார் தோனி. அதனால் நிச்சியமாக இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியை வெற்றி பெற வைத்து ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் செல்லும் சென்னை அணி என்று கூறியுள்ளார் சேவாக்.”

சென்னை ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்த முறை சென்னை அணி சேவாக் சொன்னது போல ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here