விராட்கோலி இந்திய அணியில் குல்தீப் யதாவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்ததற்கு காரணம் இதுதான் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

கிரிக்கெட் போட்டிகள் :

உலக கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த இடத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை இந்திய அணியில் பலர் கேப்டனாக வழிநடத்தியுள்ளனர். அதிலும் தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்றுள்ளது.

தோனிக்கு பின்னர் விராட்கோலி கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வந்துள்ளார். பின்பு சில பிரச்சனை காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட்கோலி. இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி :

எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் அணியில் புதிய மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அதனால் அனுபவம் வாய்ந்த சில வீரர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போகின்றனர். அதில் ஒருவர் தான் குல்தீப் யாதவ். தோனி கேப்டனாக இருந்த நேரத்தில் அருமையான சுழல் பந்து வீச்சாளர் என்ற படத்தை பெற்றுள்ளார் குல்தீப் யாதவ். ஆனால் அவருக்கு பிறகு விராட்கோலி அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார் விராட்கோலி.

இதனை பற்றி பேசிய குல்தீப் யாதவின் பயிற்சியாளர் கூறுகையில் ; “எப்பொழுதெல்லாம் கேப்டன் அவரை (குல்தீப்) ஐ நம்புகிறாரோ, அப்பொழுது அவர் விக்கெட்டை கைப்பற்றி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டியில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அப்படி இருந்து இன்னும் சரியான வாய்ப்புகள் வளநாகப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால் இப்பொழுது குல்தீப் யாதவை பாதுகாத்து வருகிறார் ரோஹித் சர்மா. அவருக்கு தெரியும் யார் எப்படிப்பட்ட வீரர் என்று. ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட குல்தீப் யதாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கேப்டனும் அவரவர் விருப்பத்திற்கு அணியில் யார் இருந்தால் சரியாக இருப்பார் என்று தனி தனி விருப்பம் இருக்கும். விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் விராட்கோலி-க்கு குல்தீபை விட அக்சர் பட்டேல்மேல் என்று நினைத்துவிட்டார்.

ஏனென்றால் அக்சர் பட்டேல் பவுலிங் மற்றும் பேட்டிங் போன்ற இரு விஷயங்களையும் அவரால் விளையாட முடியும். ஒரு கேப்டனாக அவரை நம்ப வேண்டும் என்று கூறியுள்ளார் கபில் தேவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here