ஒரு மாற்றத்துடன் களமிறங்க போகும் சென்னை அணி இதுதான் ; தோனியின் புதிய மாஸ்டர் பிளான் ; தோல்வியே இல்லை ;

போட்டி 49 :

நாளை இரவு 7:30 மணியளவில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர். இதுவரை 29 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் சென்னை அணி 19போட்டிகளிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் இரண்டாவது முறையாக பெங்களூர் அணியை எதிர்கொள்ள போகிறது சென்னை அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ;

இந்த ஆண்டு சென்னை அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது தான் உண்மை. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்தது போலவே இந்த ஆண்டும் சென்னை அணி மோசமான நிலையில் விளையாடி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே இந்த ஆண்டு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியிலும் சென்னை அணி வென்றே ஆக வேண்டும்.

சென்னை அணியின் உத்தேச அணியின் விவரம் :

ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே , ராபின் உத்தப்பா, மிச்சேல் சண்ட்னர் , அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்திரி,மதீஸ் தீக்சஹானாபோன்ற 10 வீரர்கள் நிச்சியமாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும் கடந்த ஆண்டு போட்டியில் சிவம் துபேவுக்கு பதிலாக சிமர்ஜெட் சிங் அணியில் இடம்பெற்றார். ஆனால் 2 ஓவர் மட்டும் பவுலிங் செய்து 24 ரன்களை கொடுத்துள்ளார், எந்த விக்கெட்டை-யும் கைப்பற்றவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹார் அணியில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக சரியான வீரரை தேர்வு செய்து வருகிறார் தோனி.

நாளை நடைபெற உள்ள போட்டியில் சிமர்ஜெட் -க்கு பதிலாக ராஜ்வர்தன் ஹங்காரகேகர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர்..! அப்படி இல்லையென்றால் பேட்ஸ்மேன் ஷிவம் துபே மீண்டும் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். இப்பொழுது சென்னை அணியில் பேட்டிங் எந்த பிரச்சனையும் இல்லை.

பவுலிங்கில் தான் சென்னை அணி தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. என்ன செய்ய போகிறது சென்னை அணி ? இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெறுமா ? சென்னை அணியின் முக்கியமான ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் வெற்றி கிடைக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTSபக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!