பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் கொல்கத்தா அணியின் விவரம் இதோ ; இந்த முறை சாம்பியன் படத்தை வெல்லுமா ?

நாளை இரவு நடைபெற உள்ள 8வது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். ஆமாம், இதுவரை மொத்தம் 29 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியுள்ளன.

அதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் கொல்கத்தா அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் கொல்கத்தா அணி 1 போட்டியில் வெற்றியையும், இன்னொரு போட்டியிலும் தோல்வியையும் பெற்றுள்ளது.

அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணிக்கு நிச்சயமாக சவாலாக தான் இருக்க போகிறது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி முதல் போட்டி நடந்த மைதானத்தில் தான் நாளைய போட்டியும் நடைபெற உள்ளது.

எப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்று கொல்கத்தா அணிக்கு நன்கு தெரியும். அதனால் கொல்கத்தா அணி டாஸ் வென்ற முதலில் பவுலிங்கை தான் தேர்வு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சியமாக கொல்கத்தா அணியின் ப்ளேயிங் 11ல் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட போகும் கொல்கத்தா அணியின் உத்தேச ப்ளேயிங் 11 இதுதான் :

ஓப்பனிங் பேட்ஸ்மேன் : ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். இதுவரை இரு போட்டிகள் விளையாடிய நிலையில் ரஹானே (53) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (26) ரன்களை அடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டிகளில் மோசமான நிலையில் இருந்த கொல்கத்தா அணி இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு முக்கியமான காரணமே வெங்கடேஷ் ஐயர் என்று கூட சொல்லலாம்.

அப்படி ஒரு பேட்டிங் செய்து சிறப்பான தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வெங்கடேஷ் ஐயர்…!

டாப் ஆர்டர் : நிதிஷ் ரானா , ஸ்ரேயாஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் நிதிஷ் ரானா கடந்த இரு போட்டிகளும் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை 31 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனால் இன்னும் போட்டிகளில் இவர் (நிதிஷ் ரான )எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்துதான் அடுத்த முடிவுகள் எடுக்கப்படும்.

மிடில் ஆர்டர் : சாம் பில்லிங்ஸ் மற்றும் ஷெல்டன் ஜாக்சன் போன்ற இருவர்கள் உள்ளனர். சாம் பில்லிங்ஸ் (39) ரன்களை அடித்துள்ளனர். இதில் ஷெல்டன் ஜாக்சன் பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாவிட்டலும், அவரது விக்கெட் கீப்பிங் கொல்கத்தா அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கபடுகிறது.

பவுலிங் : மிஸ்டரி ஸ்பின்னர் நரேன், ரசல், உமேஷ் யாதவ், ஷிவம் மாவி , வருண் சக்ரவத்தி போன்ற வீரர்கள் தான் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. பேட்டிங் பக்கத்தில் வேண்டுமானால் மாற்றம் ஏற்படலாம் ஆனால் ஒருபோதும் கொல்கத்தா அணியின் பவுலிங் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பது தான் உண்மை.