இந்த மூன்று வீரர்கள் ஓய்வு பெற்று ; இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் ; முன்னாள் வீரர் பனேசர் பேட்டி;

0

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறியது பேசும்பொருளாக மாறியுள்ளது.

சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி 5 போட்டியில் 4 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியது இந்திய. அதனால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு காத்திருந்தது அதிச்சியான நிகழ்வு.

அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 167 ரன்களை அடித்தனர். பின்பு இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 170 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது. வலுவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எந்த அளவிற்கும் இல்லாத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முகமத் ஷமி போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டுமென்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான பனேசர் இந்த மூன்று வீரர்கள் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டுமென்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய பனேசர் கூறுகையில் : ” ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு டாடா சொல்லும் நேரம் வந்துவிட்டது. நிச்சியமாக இதனை பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அவர்களிடையே பேசி முடிவுகளை எடுப்பார்கள். ஏனென்றால், அவருடைய இடத்தை இளம் வீரர்களுக்கு வழிவகுக்க வேண்டும். விராட்கோலி இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த போர்மில் இருக்கிறார்.”

“விராட்கோலியை பொறுத்தவரை வயது அவருக்கு வெறும் நம்பர் தான். அதனால் அடுத்த டி-20 உலகக்கோப்பை 2024ல் விராட்கோலி விளையாடுவார் என்று கூறியுள்ளார் பனேசர்.”

ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அணிக்கு சாதகமாக இல்லை. பின்பு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரோஹித் சர்மாவின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த வகையில் பிரியோஜனமாக இல்லை என்பது தான் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து யார் ஓய்வு பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here