மீண்டும் இந்திய அணியில் இடம்பெற போகிறார் மகேந்திர சிங் தோனி ; ஆனால் ப்ளேயர் இல்லை ; மாஸ்டர் பிளான் செய்த BCCI ;

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பற்றிய சர்ச்சை எழுந்து கொண்டே வருகிறது. தோனியை போல சிறந்த கேப்டன் யாரும் இல்லையென்று பல வீரர்களும் ரசிகர்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மோசமான நிலையில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தோல்வி பெற்றது இந்திய. மற்ற அணிகளுக்கு இடையே சிறப்பாக விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போட்டியில் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மோசமான நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இருந்து விலகியதால் எந்த நாட்களிலும் இல்லாத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுவரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மட்டுமே ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது இந்திய. அதன்பின்னர் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் இந்திய கிரிக்கெட் அணி திணறிக்கொண்டு வருகின்றனர்.

சற்று முன் வெளியான தகவலின் படி ; “தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கு பிறகு ஓய்வு பெற போகிறதால், அவருடைய அனுபவத்தை இந்திய அணியில் பயன்படுத்த போவதாக கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக இடம்பெற்றுள்ளார். ஆனால் குறுகிய காலத்தில் தோனியின் அனுபவம் இந்திய மிகு பயனுள்ளதாக இருக்காது.”

கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் தோனி. அதன்பின்னர் இப்பொழுது வெறும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் ஓய்வை அறிவித்த பிறகு பிசிசிஐ-ல் ஒரு பதவியில் அமர்த்த போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரு போட்டியில் எப்படி விளையாட வேண்டும், எப்படி போட்டியில் இருக்கும் அழுத்தத்தை சமாளிக்க வேண்டுமென்று தோனிக்கு நன்கு தெரியும். இந்திய அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் தோனியுடன் விளையாட வேண்டுமென்ற ஆசை நிச்சியமாக இருக்கும்.

அதனால் தோனி இந்திய அணியில் ஏதாவது பதவி கொடுத்தால், இந்திய அணியை சரியான வழியில் செல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தோனி மீண்டும் இந்திய அணியில் பணிபுரிய வேண்டுமா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here