ரோஹித் , ராகுல் இல்லையென்றால் என்ன ? இந்த வீரர்கள் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்துவார்கள் ; ஜாகீர் கான் ஓபன் டாக் ;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளனர்.

உலகக்கோப்பை 2022ல் இந்திய அணி வலுவாக காணப்பட்ட நிலையில் உலகக்கோப்பையை வெல்லும் அளவிற்கு சிறப்பாக விளையாடி வந்தனர். ஆனால் செமி -பைனல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் மோசமான நிலையில் தோல்வி பெற்றது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்திய அணிக்கு முக்கியமான காரணம் தொடக்க வீரர்கள் தான் என்றும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சொதப்பிய இந்திய அணியின் தொடக்க ஆட்டம் ;

கடந்த 15 சர்வதேச டி-20 போட்டிகளில் பல வீரர்கள் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகின்றனர். அதில் ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், ரோஹித் சர்மா போன்ற பல வீரர்களை தொடக்க வீரராக விளையாட வைத்து சோதனை மேற்கொண்டது இந்திய. ஆனால் வேறு வழியில்லாமல் உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கி விளையாடினார்.

ஆனால் அது தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ஒரு போட்டியில் கூட இவர்களுது பார்ட்னெர்ஷிப் பெரிய அளவில் இந்திய அணிக்கு உதவியாக இல்லை என்பது தான் உண்மை. தொடக்க வீரராக இருக்கும் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகின்ற 18ஆம் தேதி முதல் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.இதில் முன்னணி வீரர்களான விராட்கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் கான் கூறுகையில் : “இந்த தொடரில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. ஆனால் திறமையான வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷான் போன்ற இவர்கள் உள்ளனர். இந்த இரு வீரர்களும் சிறந்த தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தலாம்.”

“சஞ்சு சாம்சன் அல்லது சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களில் ஒருவர் மூன்றாவதாக பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார் ஜாகீர் கான்.”

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான விவரம் :

ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரன் மாலிக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here