டி-20 போட்டிக்கான இந்திய அணி இதுதான் ; ஒரு சில மாற்றம் மட்டும் தான் இருக்கும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ளது. அதில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ரெஜிஸ் தலைமையிலான ஜிம்பாபே அணியும் மோத உள்ளனர்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். ஆமாம், இதுவரை நடந்து முடிந்த தொடர் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் உலக கிரிக்கெட் அணிகள் தீவிரமான பயிற்சியில் உள்ளனர். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் இருப்பதால் உலகக்கோப்பை போட்டிக்கு இது ஒரு ஒத்திகையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமீபத்தில் தான்ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

கே.எல்.ராகுல் , ரோஹித் சர்மா, விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நிச்சியமாக ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் பலர் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தான் தெரிந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

indian Team 2

அதில் ” கிட்டத்தட்ட 90 சதவீதம் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி தயாராக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்னும் ஆசிய கோப்பை, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் ஆஸ்திரேலியாவில் எப்படி விளையாட போகிறோம் என்பதை வைத்து ஒரு சிலரை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

ரோஹித் சர்மா சொல்வதை பார்த்தால் நிச்சியமாக ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் ப்ளேயிங் 11 உறுதியாக உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.