கம்பேக் கொடுத்த முதல் போட்டியில் பட்டைய கிளப்பிய இந்திய வீரர் ; ஜிம்பாபே அணியை அலறவிட்டார் ;

ஜிம்பாபே மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நேற்று மதியம் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.

தொடர்ந்து பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர். இறுதிவரை விளையாடிய ஜிம்பாபே அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 189 ரன்களை அடித்தனர். அதில் கைஏ 4, மறுமணி 8, மாதேவீரே 5, வில்லியம்ஸ் 1, ராசா 12, ப்ராட் எவன்ஸ் 33, ங்கரவா 34 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்க வீரரான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியயோரின் அதிரடியான ஆட்டத்தால் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து 30.5 ஓவர் முடிவில் 192 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

அதில் ஷிகர் தவான் 81, சுப்மன் கில் 82 ரன்களையும் அடித்துள்ளனர். அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது இந்திய. இதில், கடந்த மார்ச் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது.

அதனால் ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் கூட விளையாட முடியாமல் இருந்தார். கிட்டத்தட்டநான்கு மாதம் கழித்து ஜிம்பாபே தொடருக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார் தீபக் சஹார். அதிலும் நேற்று நடந்த முதல் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த தீபக் சஹார் 7 ஓவர் பவுலிங் செய்து 3 விக்கெட்டை கைப்பற்றி ஜிம்பாபே அணியை அலறவிட்டுள்ளார்.

அதுவும் ஜிம்பாபே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதேபோல சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற அதிக வாய்ப்பு கிடைப்பது போல தெரிகிறது….!!