இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர்.


அதனால் நாளை இரவு நடைபெற உள்ள போட்டியில் வாழ்வா சாவா என்ற நிலையில் தான் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
சர்ச்சையை கிளப்பிய இரண்டாவது டி-20 போட்டி : அப்படி என்ன நடந்தது ?
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு பேட்டிங் அதிரடியாக அமைந்தது. அதுமட்டுமின்றி, இந்திய அணியின் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய அணியின் பவுலர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.


அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 206 ரன்களை அடித்தனர் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள். பின்பு 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் காத்திருந்தது. ஆமாம், இந்திய அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷான், சுப்மன் கில் போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதனால் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணியால் 190 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இலங்கை அணி.
தோல்விக்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் மோசமான பவுலிங் தான். ஆமாம், அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷதீப் சிங் பவுலிங் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் இரண்டாவது ஓவர் பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதில் தொடர்ச்சியாக மூன்று நோ-பால் வீசியுள்ளார். நேற்று நடந்த போட்டியில் வெறும் 2 ஓவர் மட்டுமே பவுலிங் செய்த அர்ஷதீப் சிங் 37 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் : “ஒரு திறமையான வீரராக இருந்து கொண்டு இது போன்ற தவறுகளை செய்யவே கூடாது. இது போன்ற விஷயங்களை செய்து கொண்டு இது என்கையில் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நோ பால் வீசாமல் இருப்பது பவுலருடைய கையில் தான் இருக்கிறது. பந்து வீசிய பிறகு பேட்ஸ்மேன் எப்படி எதிர்கொள்ளவார் என்பது எல்லாம் இரண்டாவது தான்.”
“இந்த மாதிரி விஷயங்கள் சரியாக செய்தால் மட்டுமே போட்டிகளில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கும். ஆனால் ஒன்று, நிச்சியமாக நோ-பால் வீசாமல் இருப்பது ஒவ்வொரு பவுலரின் கையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”
A perfect pitch for Arshadeep for avoiding him not to no bowl a single no ball 😂😂😂.#arshdeepsingh #INDvSL #INDvSL #PAKvNZ pic.twitter.com/W5dJVqP1Tm
— Shoaib Iqbal (@shebimushtaq143) January 6, 2023
No Ball..No Ball..No ball 😂🏏#SLvsIND #INDvSL #INDvsSL #Arshadeep #NoBall #NoBalls pic.twitter.com/5LvkiNSHaV
— Tharaka Jayathilaka (@TharakaOfficial) January 5, 2023
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோ-பால் வீசியது சரியான விஷயம் ஆ ? அப்படி நோ-பால் வீசாமல் இருந்திருந்தால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கைப்பற்றிருக்குமா ? உங்கள் கருத்து என்ன ?