இவர் செய்தது குற்றம் தான் ; இந்திய அணியின் தோல்விக்கு இவர் தான் முக்கியமான காரணமே ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டி நேற்று புனேவில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி. அதனால் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. பவர் ப்ளே-வை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடிய இலங்கை ரன்களை குவித்தனர். அதனால் 20 ஓவர் முடிவில் 206 ரன்களை அடித்தனர்.

பின்பு 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் தொடக்க ஆட்டம் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்த இந்திய அணியால் ரன்களை அடிக்க முடியாமல் திணறியது. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணியால் 190 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

അക്ഷർ പട്ടേൽ ബാറ്റിങ്ങിനിടെ. ചിത്രം: Twitter/ICC

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் பவுலிங் தான். ஆமாம், மோசமான பந்து வீச்சால் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய அணி.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான நிகழ்வு இதுதான் ; நிச்சியமாக இதுவும் ஒரு குற்றம் தான் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டிய. மேலும் இதனை பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : ” நாங்க (இந்திய கிரிக்கெட் வீரர்கள்) யாரும் பவர் ப்ளேவில் சரியாக ரன்களையும் அடிக்கவில்லை, பவுலிங்கும் சரியாக வீசவில்லை. இது எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது.”

“இந்த கட்டத்தில் நாங்க செய்ய கூடாத சின்ன சின்ன தவறுகளை செய்தோம். அதில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டால் சிறந்த விஷயம் தான். அவர் (அர்ஷதீப் சிங்) இதற்கு முன்பு கூட நோ-பால் வீசியுள்ளார். இப்பொழுது அவரை (அர்ஷதீப் சிங்) ஐ- பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் நோ-பால் போடுவது குற்றம் தான்.”

“மோசமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் நான்காவதாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை விளாசினார் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”