இரு முக்கியமான மாற்றத்துடன் வெற்றியை கைப்பற்ற போகும் சென்னை அணி இதுதான் ;

0

ஐபிஎல் 2023: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு என்றும் பஞ்சம் இருக்காது.

சென்னை அணியின் முன்னேற்றம் :

ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடரில் சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை பெற்றது சென்னை. பின்னர் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றியை கைப்பற்றியுள்ளது சென்னை.

இதனை தொடர்ந்து நாளை இரவு 7:30 மணியளவில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ச்சியாக வெற்றியை கைப்பற்ற ஒரு சில மாற்றங்களுடன் சென்னை அணி களமிறங்க இருக்கிறது. இருப்பினும் ப்ளேயிங் 11ல் ஏதாவது மாற்றம் ஏற்படுமா ? என்று பலருக்கு பல கேள்விகள் எழும். ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை என்பது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியமாக அமைந்தது.

அதுமட்டுமின்றி, போட்டி தொடங்கிய சில ஓவரில் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரும் (தீபக் சஹார்) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவாக இருக்கிறது. அதனால் அவருடைய இடத்தில் யார் பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும் ?

சென்னை அணியின் உத்தேச ப்ளேயிங் 11 இதுதான் :

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, மொயின் அலி, ரஹானே, ஜடேஜா, மிட்சேல் சாண்டனர், மகளா, ஹங்காரகேகர், துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தீபக் சஹாரின் பங்களிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஒன்றா ? ஏனென்றால் ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த அளவிற்கு தீபக் சஹாரின் பங்களிப்பு தேவையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here