நீங்க தான் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும் ; ஆனால் சும்மா இருக்கீங்க ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு எந்த பஞ்சமும் இல்லாமல் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியையும் கண்டு வருகின்றனர்.

இருப்பினும் நேற்று நடந்த போட்டியை நிச்சியமாக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்று. ஆமாம், நேற்று இரவு நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 212 ரன்களை அடித்தனர். பின்பு 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு தீரில் வெற்றி காத்திருந்தது.

ஆமாம், தொடக்கத்தில் நிதானமாக ஒவ்வொரு விக்கெட்டை இழந்தது லக்னோ அணி. ஆனால் பூரான் மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றியை கைப்பற்றியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. ஆனால் கேப்டனான கே.எல்.ராகுலின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆமாம், தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 11.1 ஓவர் வரை விளையாடினார். ஆனால் வெறும் 20 பந்தை மட்டுமே எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 18 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இப்படி விளையாடினால் எப்படி அணியை வழிநடத்த முடியும் என்று முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சில கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் ” கே.எல்.ராகுல் பொறுமையாக நிதானமாக விளையாடினார். ஐபிஎல் போன்ற போட்டிகளில் கே.எல்.ராகுல் நிச்சியமாக குறிப்பிட்ட போட்டிகள் கழித்து தான் ரன்களை அடிப்பார். அதனால் எதிரில் இருக்கும் வீரருக்கு அழுத்தம் ஏற்படும். அதனால் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடுவது தான் சரியான விஷயம்.”

“அதுமட்டுமின்றி, இன்னும் லக்னோ அணியில் அனைவரும் எதிர்பார்க்கும் அளவிற்கு பேட்டிங் -ஆர்டர் இருக்கிறது. அதாவது கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்தால் லக்னோ அணிக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here