முதல் இரு போட்டிகளிலும் ஒன்றும் நடக்கவில்லை ; அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இன்று இரவு தொடங்கிய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரு அணிகளும் 37 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் டெல்லி அணி 15 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகின்றனர். தொடக்க வீரர்கள் சுமாராக ரன்களை அடித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கேப்டனான டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தார். அதன்பின்பு வெறித்தனமாக விளையாடிய ரன்களை குவித்தார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்களை அடித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதில் டேவிட் வார்னர் 51, பிருத்வி ஷாவ் 15, மனிஷ் பாண்டே 26, அக்சர் பட்டேல் 54, அபிஷேக் போர்ரெல் 1 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். இப்பொழுது 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது மும்பை.

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான தொடக்கமாக மாறியுள்ளது. ஆமாம், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது மும்பை. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஆவது மும்பை வெல்லுமா ?

டாஸ் வெற்றி பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : ” நாங்க முதலில் பவுலிங் செய்ய போகிறோம். ஏனென்றால் முதல் இரு போட்டிகளிலும் முதல் பேட்டிங் செய்தோம் ஒரு பலனும் இல்லை. அதனால் தான் இந்த முடிவு செய்துள்ளோம்.ஸ்டப்ஸ்-க்கு பதிலாக ரிலே மெரிடித் இடம்பெற்றுள்ளார். போட்டி எப்படி போகிறதோ அதை வைத்து தான் இம்பாக்ட் ப்ளேயரை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார் ரோஹித்.”

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம் ? என்ன மாற்றம் செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்ல முடியும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!