இனிமேல் இவங்க யாரும் இல்லை ; இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி இதுதான் ; கவாஸ்கர் பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணி :

மற்ற நாடுகளை விட இந்திய அணியில் இடம்பெற நினைக்கும் கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகம் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு மற்ற விளையாட்டை விட கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் இருக்கும். அதேபோல பலருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்ற ஆசையும் இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டுமென்றால் உள்ளூர் போட்டியான (ரஞ்சி கோப்பை,சையத் முஸ்தாக் அலி) போன்ற போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். பின்பு ஐபிஎல் டி-20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதிலும் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம்பெற்றுவிடாமல். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால், இந்திய கிரிக்கெட் அணி நினைத்தால் மூன்று அணிகளை ஒரே நேரத்தில் மற்ற அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட வைக்க முடியும்.

அந்த அளவிற்கு அதிகமான வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். அதனால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிய இந்திய :

சூப்பர் 12 லீக் தொடரில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியது இந்திய. ஆனால் அரையிறுதி சுற்று நேற்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. அதில் பவுலிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவின் உலகக்கோப்பை வெல்லும் கனவை தகர்த்துவிட்டனர்.

பேட்டிங்-ல் ஒருவர் மாத்தி ஒருவர் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசி வருகின்றனர். ஆனால், பவுலிங் ? மோசமான நிலையில் தான் இருக்கிறது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற வீரர்கள் ஓய்வை அறிவிக்க வேண்டுமென்று சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் சில முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதில் “ஐபிஎல் 2022ன் முதல் சீசனில் கேப்டனாக விளையாடிய ஹர்டிக் பாண்டிய கோப்பையை வென்றார். அதனால் அடுத்த கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். அடுத்த கேப்டனாக ஹர்டிக் பாண்டிய பதவி ஏற்றால் நிச்சியமாக பல வீரர்கள் நாம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஓய்வை அறிவிப்பார்கள். இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் 30 வயதை கடந்துவிட்டனர். அதனால் அவர்களை மீண்டும் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவது சிரமமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”

கவாஸ்கர் சொல்வது போல, 30 வயதை தாண்டிய வீரர்கள் உடனடியாக அணியில் இருந்து விலக வேண்டுமா ?? இந்திய அணியில் என்ன மாற்றம் செய்தால் வெற்றியை கைப்பற்ற முடியும் ?