சீனியர் வீரர்களுக்கு ஒரே அடியாக ஓய்வு கொடுக்க போறீங்களா ? இந்திய அணிக்கு ஏன் இந்த நிலைமை ? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

0

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் வரை நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையில் நியூஸிலாந்து, இந்திய, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இரு தினங்களுக்கு முன்பு முதல் அரையிறுதி போட்டி நடைபெற்றது அதில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அதனால் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த போட்டி தான் அரையிறுதியில் இரண்டாவது டி-20 லீக் போட்டி. இதில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றி பெரும் அணி பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் மோதும். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தனர்.

169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரின் அசைக்க முடியாத பார்ட்னெர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை சுலபமாக பெற்று கொடுத்துவிட்டனர். 16 ஓவரில் 170 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். எப்பொழுதும் இது போன்ற முக்கியமான போட்டிகளில் இந்திய அணி தோல்வி பெரும் நிலையில் ரோஹித் சர்மா, விராட்கோலி, புவனேஸ்வர் குமார், ஷமி போன்ற வீரர்களின் ஓய்வு பற்றிய பேச்சு அடிபடும்.

இந்த மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணியில் இன்னும் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பல கேள்விகள் கேட்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” போட்டியில் தோல்வி வருவது சாதாரணம் தான். இருந்தாலும் இந்த முறை செய்த தவறை சரியாக திருத்தி கொண்டு அடுத்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.”

“இந்த ஆண்டு இந்திய அணியின் பேட்டிங் வலுவாக தான் இருக்கிறது. ஆனால் செமி பைனல் போட்டியில் வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. இந்த உலகக்கோப்பை போட்டியில் நடந்த தவறுகளை மட்டுமே பார்க்க வேண்டும். தனிப்பட்ட வீரரை குறித்து பேசுவது இது சரியான நேரமில்லை.”

“சீனியர் வீரர்களில் ஓய்வை பற்றி பேச இன்னும் இரு ஆண்டுகள் மீதமுள்ளது. அதனால் ஓய்வை பற்றி பேசுவது இது சரியான தருணம் கிடையாது. அடுத்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டுமென்ற காரணத்தால் இனிவரும் போட்டிகளில் தவறுகளை திருத்தி அணியில் மாற்றம் செய்து விளையாடுவோம் என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராகுல் டிராவிட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here