ரோஹித் சர்மா இப்படி சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது ; இவர் விளையாடியிருக்க வேண்டும் ; சேவாக் அதிரடி பேட்டி ;

அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறிய இந்திய அணியை பற்றி கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று மதியம் 1:30 அடிலேடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி தான் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 168 ரன்களை அடித்தனர்.

பின்பு 169 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்திய அணி 20 ஓவர் வரை அடித்த ரன்களை 16 ஓவரில் அடித்தது இங்கிலாந்து அணி. 170 ரன்களை அடித்த இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா பவுலர்கள் சரியாக விளையாடவில்லை என்பதை தான் முக்கியமாக கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா கருத்திற்கு சேவாக் பதிலடி :

ரோஹித் ஷர்மாவை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூறுகையில் ; ” தொடக்க வீரர்கள் முதல் 12 ஓவரில் 82 ரன்களை அடித்துவிட்டு மீதமுள்ள 8 ஓவரில் 100 ரன்களை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்த விதமான பயமும் இல்லாமல் அதிரடியாக விளையாடுவார்கள் என்று சொல்ல முடியாது, அது சரியும் இல்லை. இந்த பிட்ச்-ல் ஆவெரேஜ் ரன்கள் 150 -160 தான். ஆனால், இந்த சூழலில் ஒரு பேட்ஸ்மேன் சரியாக விளையாடி செட் ஆகிவிட்டால் நிச்சியமாக அதிகமான ரன்களை அடிக்க முடியும். “

“நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூஸிலாந்து அணி எப்படி விளையாடியது. அதனை செமி பைனல் போட்டியில் செய்யாமல் விட்டதால் தான் இப்பொழுது இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளனர். அதிகமாக ரன்களை அடித்துவிட்டோம் என்று இந்திய அணி நினைத்ததால் பவுலிங்கை தவறு சொல்ல முடியாது. அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.”

“முதல் 10 ஓவரில் நாம் அனைவரும் எதிர்பார்த்த தொடக்க ஆட்டம் இந்திய வீரர்கள் ஏற்படுத்த முடியவில்லை, அப்பொழுதே நாம் தோற்றுவிட்டோம் என்று கூறியுள்ளார் சேவாக்.”