கேப்டன் ரோஹித் இல்லையாம் ; இவர் தான் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ; முழு விவரம் இதோ ;

0

தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 1 போட்டியிலும், தென்னாபிரிக்கா அணி 2 போட்டியிலும் வென்றுள்ளது.

இன்று இரவு நான்காவது போட்டி நடைபெற உள்ளது. இனிவரும் இரு போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இதனை தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி முதல் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோத உள்ளனர். அதில் இரு போட்டிகள் மட்டுமே விளையாட உள்ளனர்.

அதற்கான இந்திய அணியின் விவரத்தை பற்றி சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஹார்டிக் (கேப்டன்), புவனேஸ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ரவி பிஷோனி, அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் மற்றும் உம்ரன் மாலிக் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஏன் ரோஹித் சர்மா கேப்டனாக இடம்பெறவில்லை ?

முக்கியமான வீரர்களான விராட்கோலி, பும்ரா, ஷர்டுல் தாகூர், ரோஹித் சர்மா மற்றும் இன்னும் சில வீரர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் விளையாட சென்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்டிக் பாண்டிய கோப்பையையும் பெற்றுள்ளது. அதனால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியையும் சிறப்பாக வழிநடத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது. அதுமட்டுமின்றி, ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு இந்திய அணியை ஹர்டிக் பாண்டிய வழிநடத்துவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது விளையாட்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் சிறப்பாக இருந்தது தான் உண்மை. அது ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது தான் உண்மை. ஐபிஎல் போட்டியில் அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்டிக் பாண்டிய இந்திய அணியையும் சிறப்பாக வழிநடத்துவாரா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here