CSK அணி நிச்சியமாக இந்த இரு வீரர்களை கைப்பற்ற முயற்சிகளை எடுக்கும் ; ராபின் உத்தப்பா உறுதி ; யார் அந்த இரு வீரர்கள் ?

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர். அதில் இருந்து இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளுக்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிகள் நடைபெற இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், ஐபிஎல் 2023 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாளை மதியம் 2:30 மணியளவில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளது. எந்த வீரர்களை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று அனைத்து அணிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணியாக திகழ்கிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணியால் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்த்து ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறுகையில் : “இந்த ஆண்டில் இருந்து சென்னை அணியில் ப்ராவோ விளையாட போவதில்லை. அதனால் அவருக்கு பதிலாக சிறப்பான ஒரு ஆல் – ரவுண்டரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சென்னை.”

“மிடில் ஆர்டர்களில் சிறப்பாக விளையாட கூடிய இந்திய வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அதனால் மனிஷ் பாண்டே மற்றும் சாம் கரணை தேர்வு செய்ய சென்னை அணி நிச்சியமாக முயற்சி செய்யும். இதில் சாம் கரன் 2020மற்றும் 2021 ஆண்டுகளில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய இருக்கிறார் என்று கூறியுள்ளார் ராபின் உத்தப்பா.”