எனக்கு வேற வழி தெரியவில்லை ; அதனால் தான் இவரை வெளியேற்றினோம் ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ; முதல் போட்டியில் வென்றதற்கு முக்கியமான காரணம் அவர் தான் ;

0

இன்று காலை 9 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் , கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதற்கு முன்பு நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான ஒரு வீரரை வெளியேற்றியதால் கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். யார் அந்த வீரர் ?

போட்டிக்கு முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் கூறுகையில் : “எனக்கு தெரிந்து முதல் பேட்டிங் செய்தால் சிறப்பாக தான் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை, சிறப்பாக விளையாடுவது தான் முக்கியம். அதுவும் இந்த முறை பவுன்சர் மற்றும் சுழல் பந்து வீச்சாளருக்கு நிச்சியமாக சாதகமாக அமையும். நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் முடிவு செய்திருந்தோம். இப்பொழுது முதல் இன்னிங்ஸ்-ல் சிறப்பாக பவுலிங் செய்து விரைவாக விக்கெட்களை கைப்பற்ற வேண்டும். “

“அதுமட்டுமின்றி இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இந்த போட்டியில் இல்லை. அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனட்கட் இடம்பெற்றுள்ளார். யாருமே எதிர்பார்க்கவில்லை, அவர் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்காது என்று, இருந்தாலும் உனட்கட்-க்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”

ஒரு சுழல் பந்து வீச்சாளருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரை அறிமுகம் செய்தது சரியான விஷயமா ? ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸ் விளையாடிய நிலையில் 8 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

முதல் இன்னிங்ஸ் விவரம் :

முதலில் பேட்டிங் செய்து வரும் பங்களாதேஷ் அணி இதுவரை 33.4 ஓவர் விளையாடிய நிலையில் 97 ரன்களை அடித்த நிலையில் 3 விக்கெட்டை இழந்துள்ளனர். அதில் நஜ்முல் ஹொசைன் 24, சாகிர் ஹசன் 15, ஹயூ 27*, ஷாகிப் 16 ரன்களை அடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here