ரோஹித் இல்லை ; இவரை போல ஒரு கேப்டன் நான் பார்த்தே இல்லை ; இவர் தான் சிறந்த கேப்டன் ; ப்ராட் ஹொக் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தன.

பின்பு சௌரவ் கங்குலி கேப்டனாக பதிவியேற்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியை சரி செய்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். பின்பு, மகேந்திர சிங் தோனி அதனை பயன்படுத்தி அணியை சரியாக வழிநடத்தி ஐசிசி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். இதுவரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர்.

அதனை அடுத்து விராட்கோலி மற்றும் இப்பொழுது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியால் ஐசிசி போன்ற முக்கியமான தொடரில் மோசமான நிலையில் வெளியேறி வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் குடன் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான நிலையில் தோல்வி பெற்றது இந்திய.

அதனால் ரோஹித் சர்மாவை காட்டிலும் தோனி தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ராட் ஹொக் சிறந்த கேப்டன் என்பதை பற்றி கூறியுள்ளார். அதில் ” எனக்கு தெரிந்து ரிக்கி பாண்டிங் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் சிறந்த கேப்டன் தான். இருவரும் அணியை சிறப்பாக வழிநடத்தி பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் அரசியல் பிரச்சனைகளை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடிய தோனி தான் சிறந்த கேப்டன் என்று கூறியுள்ளார் ப்ராட் ஹொக்.”

“இப்படி சொல்வதால் என்னை தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் , மன்னித்து விடு ரிக்கி என்று கூறியுள்ளார் ப்ராட் ஹொக்.”

மகேந்திர சிங் தோனி கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் தோனி. பின்பு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ஆனால் இன்னும் ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.