அணியில் இருந்து அனைத்து பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றிவிட்டு என்ன செய்ய போறீங்க ? ; ஆகாஷ் சோப்ரா பேட்டி ;

0

ஐபிஎல்: ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக ஆண்டுதோறும் தவறாமல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுவரை 15 சீசன் சிறப்பாக நடந்து முடிந்தநிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளனர். அதில் ஒரு சில அணிகள் கேப்டனையே அணியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அதேபோல ஒரு சில அணிகள் முக்கியமான பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றியுள்ளனர்.

ஐபிஎல் ஏலத்தை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; ” இந்த சின்ன ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி நிச்சியமாக அதிக பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ராகுல் த்ரிப்தி, அபிஷேக் சர்மா, மார்க்ரம் போன்ற பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் இந்த ஏலத்தில் முக்கியமான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.”

“அதுமட்டுமின்றி, பஞ்சாப் கிங்ஸ் அணி கைவிட்ட வீரரான மயங்க் அகர்வால் மற்றும் பென் ஸ்டோக்ஸ் போன்ற இரு வீரர்களை தேர்வு செய்யவேண்டும். ஏனென்றால், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியிடம் 42 கோடி ரூபாய் மீதமுள்ளது. அதுமட்டுமின்றி, பவுலர்கள் அதிகம் இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கியமான வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா..!”

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரம் :

அப்துல் சமத், ஐடென் மார்க்ரம், ராகுல் திரிபதி, க்ளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜென்சென், வாஷிங்டன் சுந்தர், பார்ரோக்கி, கார்த்திக் தியாகி, புவனேஸ்வர் குமார், நடராஜன், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிபட்சமாக பவுலர்களை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி ஒரு சில பேட்ஸ்மேன்களை மட்டுமே தேர்வு செய்தனர். ஆனால் இந்த முறை அவர்களையும் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுள்ளது. அதன்பிறகு சரியான அணி அமையாமல் தவித்து வருகிறது என்பது தான் உண்மை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here