நீ யார இருந்தாலும் இதை நீ காத்துக்கொள்ள வேண்டும்; சென்னை வீரருக்கு எச்சரிக்கை முன்னாள் வீரர்….!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி பல சுவாரஸ்யமான சம்பவங்களை கொண்டுள்ளது இந்த ஐபிஎல் 2020.

இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சர்களும் சென்னை அணியை விமர்சித்து வருகின்றன.

சென்னை அணியின் தோல்விக்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடைசியாக பெங்களூர் அணியை எதிர் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி முதல் 15 ஓவர் வரை நிதானமாக ரன்களை எடுத்த பெங்களூர் அணி தீடிரென அதிரடியாக அடி பெங்களூர் கேப்டன் விராட் கோலி 90 ரன்களை எடுத்து அணியின் மொத்தாமாக 169 ரன்களை எடுத்துள்ளார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வாட்சன் 14 ரன்கள் , டுபலஸிஸ் 8 ரன்கள் மற்றும் ராயுடு 42 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி அதிரடியாக விளையாடி 10 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இறுதிவரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் விமர்சர்கர் இதனை விமர்சித்து வருகின்றன.

இதனை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ராயுடுவை பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார்;;

அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். அதனால் அவருக்கு வீரர்களின் யோசிக்கும் திறன் அவருக்கு தெரியவேண்டும். அதுமட்டுமின்றி 42 பந்தில் 40 ரன்களை மட்டுமே எடுத்தது ஒன்றும் பெரிதல்ல. இவ்வாறு பண்ணாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்.