எப்பையும் தோனி இப்படி தான் செய்வார் : அதனால் தான் அவருடைய நம்பர் என்னிடம் இல்லை ; ரவி சாஸ்திரி ஓபன் டாக் ; அட.. காரணம் இதுதானா…!

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி , இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை பற்றி பேசியுள்ளார்.

இந்திய அணியின் முக்கியமான கேப்டனாக கருதப்படுகின்ற ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். ஏனென்றால் இதுவரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது. அதனை தொடர்ந்து விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பைகளை பெற தரவிட்டது.

இப்பொழுது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் ? ஐசிசி கோப்பைகளை வெல்லுமா இந்திய அணி ? இதற்கிடையில் தான் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் , தோனியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

தோனி பற்றி கூறுகையில் ; தோனி எப்பொழுதும் கையில் போன் வைத்திருக்கமாட்டார். ஆமாம்…! ஒருவேளை போன் பயன்படுத்த கூடாது என்று சொல்லிவிட்டார், அதனை அவர் உடனடியாக செய்துவிடுவார். இப்போ வரைக்கும் தோனியின் தொலைப்பேசி நம்பர் என்னிடம் இல்லை. அதனை வாங்கவும் நான் யோசித்ததும் இல்லை.

மற்றவர்களை போல மகேந்திர சிங் தோனி இல்லை, அவரை போன்ற ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் 0 அல்லது 50, 100 ரன்களை அடித்து உலகக்கோப்பை வென்றாலும் சரி அல்லது முதல் போட்டியில் தோல்வியை பெற்றாலும் சரி அவருடைய முகம் ஒரே மாதிரி தான் இருக்கும் .

சத்தியமாக சொல்றேன் பல வீரர்களை நான் கிரிக்கெட் உலகத்தில் பார்த்திருக்கின்றேன், ஆனால் தோனியை போல ஒருவரும் இல்லை. சச்சின் டெண்டல்கர் ஒரு சிறந்த வீரர், அவரே அப்போ அப்போ டென்ஷன் ஆவார். ஆனால் தோனிக்கு கோபமே வராது, அவர் அதனை பற்றி யோசிப்பதும் இல்லை என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும், அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனியும் இணைந்து வேலை செய்தனர். ஆனால் அதில் எதிர்பாராத விதமாக இந்திய அணி லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.