வீடியோ; சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தோனியின் உழைப்பை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர்…. !!!

0

கடந்த செப்டம்பர் 19ம் தேதி அன்று தொடங்கிய ஐபிஎல் 20 20 ரசிகர்களின் எதிர்பார்ப்பை கொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 4 வது போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர் கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 164 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஓபனிங் பேட்ஸ்மேன்  வாட்சன் 1 ரன்னிலும் , டுப்லஸ்ஸிஸ் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த ராய்டு 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் வெறும் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இந்த முக்கியமான 4 விக்கெட் முதல் 6 ஓவரில் பறிகொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேறு வழி இல்லாமல் தோனி ஆட்டத்தில் இறங்கினார்.

ஆறாவது ஓவரில் இருந்து 20 ஓவர் வரை போராடிய தோனி எந்த பலனும் இல்லாமல்  தோல்வியை சந்தித்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி. எப்படியாவது சென்னை அணியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று இரு ரன்களாக ஓடிய தோனிக்கு ஒரு கட்டத்தில் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. 

இருந்தாலும் சில நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முடிந்தவரை போராடினார் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

தோனியின் வயதை வைத்து பலர் கிண்டல் செய்தாலும். ஆதரவாகவும் உறுதுணையாகவும் பல ரசிகர்கள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பட்ட கஷ்டத்தை பார்த்த சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் வேதனையை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here