தோனியின் வயதை பற்றி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் கருது கூறியுள்ளார்..!

0

ஐபிஎல் 2021: வருகின்ற மாதம் 9ஆம் தேதி அன்று தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் அதுவும் எந்த ரசிகர்களும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்றனர். அதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் நம்ம இந்தியாவில் நடக்கவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டு போல் ரசிகர்கள் யாரும் இல்லாமல் தான் ஐபிஎல் போட்டிகளில் நடைபெறும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் மீண்டும் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. அதனால் மீண்டும் இந்தியாவில் பல கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த ஆண்டு நிச்சயமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த வாரம் சென்னை வந்தடைந்தார்.

அவர் மட்டுமின்றி சென்னை அணியின் சில வீரர்களும் சென்னை வந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றன்னர்.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் தோனியை பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார் ; தோனியின் வயது இப்பொழுது 40 ஆகிவிட்டது. ஆனால் அவரது உடம்பு மற்றும் அவரது சுறுசுறுப்பும் நம்மளை ஆர்ச்சரியத்தில் ஆழ்த்தும். அவர் எப்பொழுது அணியில் இணைந்தாலும் நிச்சியமாக ஒரு பிளான் வைத்திருப்பர். அந்த பிளான் பாடி தான் அவர் வேலை செய்வார் என்று கூறியுள்ளார் ராஜிவ் குமார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் ஐபிஎல் போட்டி வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here