மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட போகிறாரா தோனி ? முன்னாள் வீரர் போட்ட ட்வீட் ; சர்ச்சையாக மாறியது ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 34 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் மீதம் 36 போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை தவிர்த்து இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுகள் உள்ளன. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டு இருந்த சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்களை அடித்தனர்.

பின்பு 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை அணி. அப்பொழுது சென்னை அணி இறுதி வரை போராடிய நிலையில் இரு ஒவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்பொழுது மகேந்திர சிங் தோனி, இறுதி ஓவரில் நம்பிக்கையோடு பவுண்டரி அடித்து தொம்சம் செய்தார்.

அதிலும் குறிப்பாக இரு பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் தோனி பவுண்டரி ரன்களை அடித்து சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் தோனி..!

தோனியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்து முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆமாம், அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளரான ஆர்.பி.சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்த ஒரு ட்வீட் இப்பொழுது வைரலானது.

அப்படி என்ன ட்வீட் ?

அதில் தோனி ஓய்வில் இருந்து வெளியே வந்து மீண்டும் இந்திய அணியில் அதுவும் இந்த ஆண்டு நடைபெற போகின்ற உலகக்கோப்பையில் விளையாட தோனியின் கேட்கலாமா என்று பதிவு செய்துள்ளார். அதற்கு பல ரசிகர்கள் சரி என்றும் பலர் இது முட்டாள் தனமாக உள்ளது என்றும் கூறி வரும் நிலையில், இந்த ட்வீட் இப்பொழுது சர்ச்சையாக மாறியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க..! தோனி சிறந்த பினிஷர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், மீண்டும் இந்திய அணியில் விளையாட வைப்பது சரியாக இருக்குமா ?? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன, கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here