மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அதிக விலை கொடுத்து வாங்கியது சரியா ?? இல்லையா ??

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 37 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை (ஐந்து) சாம்பியன் படத்தை வென்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் அணி தான்.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வியை பெற்ற ஒரே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி தான். ஆமாம், இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.

ஐபிஎல் 2022 போட்டிகளில் தொடங்கும் முன்பு மெகா ஏலம் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி சரியான வீரர்களை குறிவைக்க தவறிவிட்டதாக பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதுவும் ஐபிஎல் 2022 ஏலத்தில் இஷான் கிஷானை 15.25 கோடி விலை கொடுத்து வாங்கியது மும்பை அணி.

இதுதான் அதிகபட்ச விலையே, இந்த மெகா ஏலத்தில். மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு பதிலாக அதுவும் இந்த பணத்திற்கு மாற்று இரு வீரர்களை தேர்வு செய்திருக்கலாம். ஏனென்றால் இஷான் கிஷான் பேட்ஸ்மேன் மட்டுமே, அவ்வப்போது விக்கெட் கீப்பராகவும் விளையாடி வருகிறார்.

ஒரு ஆல் – ரவுண்டருக்கு இந்த விலை கொடுத்திருந்தால் கூட சரியாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி, இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று ரோஹித் சர்மா நம்பிக்கொண்டு வருகிறார். இதுவரை இஷான் கிஷான் விளையாடிய ஐபிஎல் போட்டிகளிலும் சரி, இந்தியாவுக்காகவும் சரி தொடக்க வீரராக பெரிய அளவில் விளையாடவில்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிகளில் இஷான் கிஷான் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 199 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதிலும் ஒரு போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக 81 ரன்களை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, ஒரு அணிக்கு தொடக்க ஆட்டம் எப்படி அமைகிறதோ, அதன்படி தான் வெற்றி இருக்கும்.

ஒருவேளை இஷான் கிஷான் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடினால் நிச்சியமாக அதிக ரன்களை அடிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் இஷான் கிஷானுக்கு பதிலாக யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்பது மிகப்பெரிய கேள்வி குறியாக மாறியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள்..! நீங்க சொல்லுங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருப்பது எது ? இஷான் கிஷான் ஓப்பனிங் ஆ ? மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்ததா ?? அல்லது என்ன காரணம் என்பதை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!