ரொம்ப யோசிக்கவே வேண்டாம் ; எங்கள் பிளான் இதுதான் ; ரவீந்திர ஜடேஜா ஓபன் டாக் ;

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. என்னதான் மயங்க் அகர்வால் விரைவாக ஆட்டம் இழந்தாலும், அதன்பின்னர் விளையாடிய தவான், ராஜபக்ச போன்ற இருவரும் போட்டியை அதிரடியாக கொண்டு சென்றனர்.

அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 187 ரன்களை அடிக்க முடிந்தது. அதில் மயங்க் அகர்வால் 18, தவான் 88, ராஜபக்ச 42, லிவிங்ஸ்டன் 19 மற்றும் பரிஸ்டோவ் 6 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

டாஸ் வெற்றி பெற்ற பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ; “முதலில் பவுலிங் காரணம், dew நிச்சியமாக இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மாறும் என்பதற்கு தான். அதுமட்டுமின்றி, நாங்க எப்பொழுதும் அதிகமாக யோசிக்கவே மாட்டோம்.”

“எங்களுது செயல் மிகவும் எழுமையாக தான் இருக்கும். என்ன பிளான் பண்ணாலும் அதனை செய்யவதை மட்டுமே யோசிப்போம். அதனால் அதிகமாக விஷயங்களை செய்ய நிச்சியமாக முயற்சிகளை எடுக்கவே மாட்டோம். ஒரு சில நேரங்களில் டாஸ் -ல் தோல்வி பெற்று தவறான முடிவுகள் கிடைத்துள்ளது.”

“ஒரு சில நேரங்களில் பேட்டிங் சரியாக விளையாடமாட்டோம், அல்லது பவுலிங் சரியாக இருக்காது. அதனால் எதனை பற்றியும் அதிகமாக யோசிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா..!”